விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’, பூஜையுடன் ஆரம்பம்

03 Mar 2026

சன் ஆப் விண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், துளசி ராமன் இயக்கத்தில் விதார்த், சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா, கேஷவ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தொடக்கம்’.

இப்படம் மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக உள்ளது.

இப்படத்தின் இயக்குனர் துளசிராமன், இதற்கு முன்பு, ‘டோபிப்போ’ குறும்படத்தையும், ‘புனை, பிக் பாஸ்’ ஆகிய பைலட் படங்களையும் இயக்கியவர். மேலும் “டாம் அண்ட் ஜெர்ரி,’ மற்றும் ‘மிஸ் பிரியா’ போன்ற தொடர்களையும் இயக்கிய அனுபவம் பெற்றவர். தர்ஷன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்த “First Single” ஆல்பம் பாடலையும் இயக்கியுள்ளார். 

தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:

இயக்குநர் – துளசி ராமன்

இசையமைப்பாளர் – பரத் ஷங்கர்

ஒளிப்பதிவாளர் – ஸ்ரீகாந்த்

எடிட்டர் – வச்சு லக்ஸ்மின்

கலை இயக்குநர் – Ralibedinez

பிஆர்ஓ – ரேகா

ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – ஜானி JD

ப்ரொடக்ஷன் மேனேஜர் – பொன்ராஜ்

மேக்கப் – ரமேஷ்

 

Tags: thodakkam, vidharth

Share via: