தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த நடிகர் ரியோ ராஜ்
03 Mar 2026
நடிகர் ரியோ ராஜ் புதிதாக ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தனது தயாரிப்பு பற்றி ரியோ ராஜ் கூறுகையில்,
“இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும், என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் இடையறாத ஊக்கமும் நம்பிக்கையும் தான் இன்று என்னை ஒரு நடிகனாக உருவாக்கியது. அந்த நம்பிக்கையே இப்போது இந்த புதிய முயற்சியை தொடங்கும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்பது என் ஆர்வத்தின் வெளிப்பாடு. பார்வையாளர்களுடன் ஆழமாக இணையும் கதைகளை சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் முதலில் இரண்டு படங்களை ஆரம்பிக்க உள்ளது. இதற்கு ரெட் ராக் பிக்சர்ஸ், மற்றும் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் முதலீட்டார்களாக ஆதரவு தருகின்றனர்.
முதல் படம்..
முதல் தயாரிப்பை கதிரவன் இயக்குகிறார். சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைக்கிறார்; சுந்தர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராம் கலை இயக்குநராகவும், ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை சுகன் வடிவமைக்கிறார்.
இரண்டாவது படம்.
இரண்டாவது தயாரிப்பை கே. சிவமுனீஸ்வரன் எழுதி இயக்குகிறார். K. G. வருண் — ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான இவர், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு முன் யூடியூப் இணையத் தொடரிலும், ஒரு சுயாதீனத் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அவருக்கு வெள்ளித்திரையுலகில் நுழைவதற்கான முன்னேற்றமாக அமைகிறது.
ராகுல் K G விக்னேஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்; வருண் K G படத்தொகுப்பை கவனிக்கிறார். ABR கலை இயக்குநராக இணைகிறார். ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் உடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்; சித்து குமார் இசையமைக்கிறார்.
Tags: rio raj
