தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 16வது தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று மே 2ம் தேதி கொரானோ காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது.

திமுக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் திரையுலகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தியேட்டர்காரர்கள் ஆகியோர் போட்டியிட்டனர்.

அவர்களில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் அம்பேத்குமார், தியேட்டர் ஓனர் ஐட்ரீம் மூர்த்தி ஆகிய மூவர் மட்டுமே வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்...

திமுக

உதயநிதி ஸ்டாலின் - நடிகர், தயாரிப்பாளர் (சென்னை, சேப்பாக்கம்)
ஐட்ரீம் மூர்த்தி - தியேட்டர்காரர் (சென்னை, ராயபுரம்)
அம்பேத்குமார் - தயாரிப்பாளர் (வந்தவாசி)

தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள்

மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசன் - நடிகர், தயாரிப்பாளர் (கோவை தெற்கு)
ஸ்ரீப்ரியா - நடிகை, இயக்குனர் (சென்னை, மயிலாப்பூர்)
சினேகன் - பாடலாசிரியர், நடிகர் (சென்னை, விருகம்பாக்கம்)
பி.டி.செல்வகுமார் - இயக்குனர், தயாரிப்பாளர் (கன்னியாகுமரி)

பாரதீய ஜனதா கட்சி

குஷ்பு - நடிகை, தயாரிப்பாளர் (சென்னை, ஆயிரம் விளக்கு)
வினோஜ் பி செல்வம் - தியேட்டர்காரர் (சென்னை, துறைமுகம்)

நாம் தமிழர் கட்சி

சீமான் - இயக்குனர், நடிகர் (சென்னை, திருவொற்றியூர்)

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்

ராஜேந்திரநாத் - நடிகர் (ஆலங்குளம்)

சுயேச்சை

மயில்சாமி - நடிகர் (சென்னை, விருகம்பாக்கம்)
மன்சூரலிகான் - (கோவை, தொண்டாமுத்தூர்)