புதிய படங்களுக்கு செக்: தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு
22 Jun 2024
புதிய படங்கள் தொடங்கப் போவதில்லை என்ற புதிய முடிவினை எடுத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் விற்பனை என்பது முற்றிலுமாக குறைந்துவிட்டது. முன்பு 10 கோடி வாங்கப்பட்ட உரிமைகள் எல்லாம் இப்போது 1 கோடிக்கு தான் வாங்கப்படுகிறது. இதனால் தமிழ் திரையுலகமே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை மட்டுமே உடனடியாக வாங்கிக் கொள்கிறார்கள். அதுவும் குறைந்த விலை தான்.
இதனிடையே, இந்த சூழலை எப்படி கையாளலாம் என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கூட்டம் ஒன்றிணை நடத்தியது. இதில் நடிகர்கள் சம்பளம், ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதில், இந்த நிலை அனைத்தையும் பேசி சரி செய்த பிறகே புதிய படங்களைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் நடிகர்களின் சம்பள உயர்வைத் தான் பேசலாம் என்று முடிவு செய்துள்ளனர். இனி நடிகர்களுக்கு வியாபாரத்தில் பங்கு என்ற ரீதியில் சம்பளம் கொடுக்கலாம் என்ற பேச்சும் நிலவி இருக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எப்படிப் போகிறது என்ற சூழலைப் பொறுத்தே, தமிழ் சினிமாவில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று தெரிகிறது.
Tags: tamilnadu producer council