’டிடி ரிட்டன்ஸ் 2’ கூட்டணி முடிவானது
22 Jun 2024
‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தினை ஆர்யா தயாரிக்க சந்தானம் நடிப்பது முடிவாகிவிட்டது.
சந்தானம் நடிப்பில் பெரும் வரவேற்பினை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதன் 2-ம் பாகமும் வரவேற்பினைப் பெற்றது. தற்போது தயாரிப்பாளர் மாறியதால் இதன் 3-ம் பாகத்தினை ‘டிடி ரிட்டன்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கினார்கள். இதற்கும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படம் உருவாவது முடிவாகி இருக்கிறது. இதனை ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கவுள்ளார். இதற்கான இறுதி வடிவம் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தினை ஆர்யா தயாரிக்க சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிப்பது உறுதியாக் இருக்கிறது. இவர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘கோட்’ படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Tags: dd returns, santhanam