‘கோட்’ தெலுங்கு உரிமைக்கு கடும் போட்டி
22 Jun 2024
‘கோட்’ படத்தின் தெலுங்கு உரிமையினைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’கோட்’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் விற்கப்பட்டுவிட்டன. தற்போது இதர மொழி உரிமைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கு உரிமையினைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
சித்தாரா நிறுவனம், மைத்ரி மூவி மேக்கர்ஸ், தில் ராஜு உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் ‘கோட்’ தெலுங்கு உரிமையினைக் கைப்பற்றும் என்று தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் தான் எம்ஜி முறையில் உரிமையினைக் கோரி வருகிறார்கள்.
’கோட்’ தெலுங்கு உரிமையினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கைப்பற்றும் பட்சத்தில், ஒரே சமயத்தில் விஜய் – அஜித் இருவரின் படங்களிலும் பணிபுரியும் நிறுவனம் என்ற பெயர் பெறும். ஏனென்றால் இந்த நிறுவனம் தான் அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தினையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags: goat, vijay, venkat prabhu