’கூலி’ அப்டேட்: பிரம்மாண்ட விமான சண்டைக் காட்சி
22 Jun 2024
‘கூலி’ படத்தில் பிரம்மாண்ட விமான சண்டைக் காட்சி ஒன்றினை காட்சிப்படுத்த உள்ளது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, ஃபகத் பாசில், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜூலையில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’கூலி’ படத்தில் விமானத்தில் நடைபெறுவது போல பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்று இருக்கிறது. இதனை எப்படி காட்சிப்படுத்தலாம் என்று இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கு மட்டுமே பல கோடிகளை செலவு செய்யவுள்ளது படக்குழு.
இதில் யாரெல்லாம் பங்கெடுக்க உள்ளார்கள் என்பது தெரியவில்லை. இதனை எங்குக் காட்சிப்படுத்தலாம் என்ற முதற்கட்ட ஆலோசனை தொடங்கி இருக்கிறது. இதை சரியாக காட்சிப்படுத்தி விட வேண்டும் என்ற காரணத்திற்காக, இதற்கு மட்டும் தனியாக உதவி இயக்குநர்கள் குழு ஒன்றிணை பணிபுரிய ஒதுக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது நடிகர்களின் தேதியை முன்வைத்து, படப்பிடிப்புக்காக தேதிகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது முடிந்தபிறகே முதற்கட்ட படப்பிடிப்பில் என்ன காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியவரும்.
Tags: coolie, rajinikanth