சினிமாட்டோகிராப் சட்ட திருத்த மசோதா, சூர்யா எதிர்ப்பு

02 Jul 2021

சினிமாட்டோகிராப் சட்ட திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு கடந்த மாதம் 18ம்தேதி வெளியிட்டது.

அதற்கு இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் கூட, “சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூனறு குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது. வரவிருக்கும் துமைக்கு எதிராகக் குரல் கொடுப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும்,” என்றும் தனது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இன்று டிவிட்டரில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல..., இன்றே கடைசி நாள் உங்களது ஆட்சேபணைகளைப் பதிவு செய்யுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள். 

Tags: suriya, surya, actor surya, actor suriya

Share via: