சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?
22 Apr 2024
சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘புறநானூறு’. 2டி நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருந்தார். இதன் பாடல் பதிவு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதனிடையே, திடீரென்று ‘புறநானூறு’ படம் கைவிடப்பட்டது. இதனால் சுதா கொங்காராவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. தற்போது சிம்பு தொலைபேசி வாயிலாக சுதா கொங்காராவிடம் பேசியிருக்கிறார். ஏற்கனவே முன்பு ஒரு முறை பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கதை தயாரானவுடன் சந்திக்கலாம் என்று சுதா கொங்காரா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுதா கொங்காரா – சிம்பு கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டால், உடனடியாக ஒப்பந்தம் செய்ய 4 முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
Tags: sudha kongara, simbu, str, silambarasan