அடுத்த இயக்குநர் யார்? – குழப்பத்தில் சூரி

13 Jun 2024

அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் சிக்கி இருக்கிறார் சூரி.

‘விடுதலை’ படத்துக்குப் பிறகு, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கருடன்’ படத்தில் நடித்திருந்தார் சூரி. இந்தப் படம் யாரும் எதிர்பாராத விதமாக வசூலைக் குவித்தது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்த வசூலில் சுமார் 35 கோடியை தாண்டிவிட்டது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருமே பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

‘கருடன்’ படத்தின் வெற்றி, சூரியை பெரும் சிக்கலில் மாட்டி இருக்கிறது. என்னவென்றால் முன்னணி இயக்குநர்கள் பலருடைய படத்தில் சூரி காமெடியான நடித்திருந்தார். தற்போது ‘கருடன்’ வெற்றியை முன்வைத்து, அவர்கள் அனைவருமே நாயகனாக நடிக்க சூரியை அணுகியிருக்கிறார்கள்.

இதில் சிலருடைய கதையைக் கேட்டுள்ளார் சூரி. ஒருசில கதையினை வேண்டாம் என்று கூறிவிட்டாலும், இப்போது யார் கதையில் நடிக்க முதலில் தேதிகள் ஒதுக்கலாம் என்ற சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி சில தயாரிப்பாளர்கள் ‘விடுதலை’ படத்துக்குப் பிறகு சூரிக்கு முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

‘கருடன்’ வெற்றிக்குப் பிறகு, அடுத்து தேதி நமக்கு தானே என்று தொலைபேசியில் கேட்டிருக்கிறார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறார் சூரி

Share via: