இளன் இயக்கத்தில் தனுஷ்

13 Jun 2024

இளன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் தனுஷ் நடிக்க முடிவு செய்துள்ளார்.

‘பியார் பிரேமா காதல்’ வெளியீட்டுக்குப் பிறகு, இளன் இயக்கவிருந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். முழுக்க மதுரையை களமாக கொண்ட கதை, பெரிய பொருட்செலவு என்பதால், இந்தப் படம் உருவாகுமா என்ற பேச்சு நிலவியது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே இளன் – தனுஷ் படம் கைவிடப்பட்டது.

பின்பு கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தினை இயக்கினார் இளன். இதன் உருவாக்கம், வசூல் என அனைத்துமே திரையுலகினர் மத்தியில் இயக்குநர் இளனுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதனை முன்வைத்து மீண்டும் இளனை அனைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் தனுஷ்.

முதலில் கைவிட்ட அதே மதுரையை கதையை படமாக்கவுள்ளார்கள். இதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது நடித்து வரும் படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, இளன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். பெரிய கதைகளம் என்பதால், எவ்வளவு நாள் தேதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்காக மதுரையில் தனது உதவி இயக்குநர்கள் படையுடன் தங்கி பணிபுரிந்து வருகிறார் இளன். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share via: