தூய்மையான ஆன்மா மட்டுமே முக்கியம் என்பதை உணர்த்தும் ‘குபேரா’ - தனுஷ்

02 Jun 2025
சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

நடிகை ரஷ்மிகா மந்தனா

நடிகர் தனுஷுடன் முழு நீள காதல் படம் ஒன்றில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

 தேவி ஸ்ரீ பிரசாத்

 'குபேரா'வின் பாடல்களான 'போய்வா நண்பா' மற்றும் 'டிரான்ஸ் ஆஃப் குபேரா'வுக்கு கொடுத்த மகத்தான வரவேற்பிற்கு நன்றி. குட்டி திரைப்படம் முதல் வேங்கை வரையிலும், தற்போது 'குபேரா'விலும் தனுஷுடன் எங்கள் வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறது.

 இயக்குனர் சேகர் கம்முலா

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனுஷ் ஒரு "அற்புதமான ஆளுமை"  குபேரா ஒரு அற்புதமான படம். குபேரா மிகவும் அற்புதமான படம். குபேரா மிக மிக அற்புதமான படம். 

 நடிகர் நாகார்ஜுனா

அடையாறில் பிறந்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு இங்கு எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.  சென்னை ரசிகர்கள் எனக்குக் காட்டிய தொடர்ச்சியான அன்புக்கு எனது நன்றி. 'குபேரா'வுக்குப் பிறகு, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'கூலி' ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது.

 நடிகர் தனுஷ்

இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம். தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது. பரலோகத்திலிருந்து வந்த தெய்வீக தேவதை போல தூய்மையான ஆன்மாவான சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ஜான்வி நரங் ஆகியோரின் 'குபேரா' திரைப்படத்தின் கதை மீதான நிரந்தமான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு காலம் கடந்து நிற்கும்.
 
 'குபேரா'வில் கொளுத்தும் வெயிலில், வெறுங்காலுடன், கிழிந்த ஆடைகளில் திருப்பதி மண்ணில், ஒரு பிச்சைக்காரனாக நடித்தது, எனது வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களை நினைவூட்டிய ஒரு பாத்திரம். ராஞ்சானாவின் போது பனாரஸில் எனது கடந்தகால அனுபவத்துடன் அது இருந்தது. பேராசை, பணம், உலக இன்பங்கள்-அவை ஒன்றுமில்லை, தூய்மையான ஆன்மா மட்டுமே முக்கியம்" என்பதை உணத்தியது. இந்த படம் உங்கள் அனைவருக்கும், அதை கண்டிப்பாக உணர்த்தும். 'குபேரா'வின் வெற்றி எப்படி இருக்கும் என்பதில் எனக்கு 2000 மடங்கு நம்பிக்கை உள்ளது
 
குபேரா, இந்த மாதம் ஜுன் 20ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.

Tags: kuberaa, dhanush, nagarjuna, rashmika mandana, sekar kammula, devi sri prasad

Share via: