மலையாளத்தில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா

08 Apr 2024

தமிழ், தெலுங்கினைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவருடைய கால்ஷீட் கிடைப்பதற்காக பல்வேறு படங்கள் காத்திருக்கின்றன.

இதனிடையே, மலையாளத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதில் நாயகனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தினை ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தினை இயக்கிய விபின் தாஸ் இயக்கவுள்ளார்.

இது தொடர்பான தகவல் வெளியானதில் இருந்து, பலரும் ஃபகத் பாசில் – எஸ்.ஜே.சூர்யா இருவரின் நடிப்பை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Tags: sj suryah, malayalam, fahad faasil

Share via: