ப்ரதீப் ரங்கநாதனின் புதிய படம்
08 Apr 2024
மைத்ரி மூவி மேக்கஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் ப்ரதீப் ரங்கநாதன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எல்.ஐ.சி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரதீப் ரங்கநாதன். இதன் 70% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ப்ரதீப் ரங்கநாதன்.
இந்தப் படத்தினை சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ளார். இவருடைய கதையினை கேட்டுவிட்டு உடனடியாக தயாரிக்க முன்வந்துள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இது தான் அவர்களுடைய தயாரிப்பில் உருவாக இருந்தல் முதல் தமிழ் படமாகும்.
அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் பெரிய பட்ஜெட் என்பதால், அதனை முதலில் அறிவித்துள்ளார்கள். ப்ரதீப் ரங்கநாதன் – கீர்த்திஸ்வரன் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Tags: pradeep ranganathan, mythri movie makers
