சிவகார்த்திகேயன் படத்தை உறுதி செய்த வெங்கட்பிரபு
26 Aug 2024
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ‘கோட்’ படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
முதலில் சுதீப், பின்பு சிவகார்த்திகேயன் என பல பேருடைய படங்களை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது ‘கோட்’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தனது அடுத்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் என்பதை உறுதி செய்திருக்கிறார் வெங்கட்பிரபு.
அதில், சிவகார்த்திகேயன் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனை முடித்த பிறகு தனது இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார். வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Tags: sivakarthikeyan, venkat prabhu