‘கங்குவா’ வெளியீடு ஒத்திவைப்பு

26 Aug 2024

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அதே தேதியில் ‘வேட்டையன்’ படமும் வெளியாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஞானவேல்ராஜா, தனது விநியோகஸ்தர்கள் அனைவரிடம் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கண்டிப்பாக வசூல் பிரியும் என்பதால், மொத்த வசூல் குறைய வாய்ப்பு அதிகம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் இறுதிகட்டப் பணிகளும் முழுமையாக முடிவடையாத சூழலும் இருக்கிறது.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, ‘கங்குவா’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி அல்லது நவம்பர் மாதம் வெளியீடு இருக்கும் என தெரிகிறது. ‘கங்குவா’ தீபாவளி வெளியீடு என்று உறுதி செய்யப்பட்டால், ஏற்கனவே தீபாவளி வெளியீடாக இருக்கும் ‘அமரன்’ மற்றும் ‘பிரதர்’ வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

Tags: kanguva, suriya

Share via: