ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சைரன்’ டீசர், ரசிகர்கள் வரவேற்பு
14 Nov 2023
ஹோம் மூவி மேக்கர்ஸ் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சைரன்’ படத்தின் டீசர், தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
இப்படத்தில் முதல் முறையாக நடுத்தர வயதில் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு, சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பாத்திரத்தின் குரலில் ஒரு கதையும், போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் படத்தின் மையக்கதையை சொல்கிறது சைரன் டீசர். இந்த டீசருக்கு யு டியுபில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ’ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்பத்துடன் பார்க்கும்படியாக, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
Tags: siren, jayam ravi, keerthy suresh