பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம் கொட்டேஷன் கேங் - இயக்குனர் விவேக் கண்ணன்

14 Nov 2023

பிலிமினாட்டி எண்டர்டெயின்மெட்ன் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விவேக் கே கண்ணன் இயக்கத்தில், சிவமணி இசையமைப்பில், பிரியாமணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’.

இப்படம் பற்றி இயக்குனர் விவேக் கே கண்ணன் கூறுகையில்,

‘’கொட்டேஷன் கேங்’ என்ற வார்த்தை கேரளாவில் பிரபலமான ஒன்று.  ஆனால், இந்தப் படம் அவர்களைப் பற்றியது அல்ல.  அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்ததால் அதை மட்டும் எடுத்துக்கொண்டேன், மற்றபடி கேரள ‘கொட்டேஷன் கேங்’குக்கும் இந்த படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அப்படிப்பட்ட கும்பலைப் பற்றிக் கதையில் சொல்லப்பட்டாலும், அதை மட்டுமே முழு கதையாக சொல்லாமல், வேறு சில கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்படி திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறேன். 

நமக்குத் தெரியாத பல போதை பழக்கங்கள் இங்கு இருக்கின்றன. அதற்கு இளைஞர்கள் அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த போதை பொருட்கள் பற்றி பெற்றோர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதுவும் தெரிவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த போதை மது மட்டுமே. ஆனால் அதைத் தாண்டிய ஒரு போதை உலகம் இங்கு இருக்கிறது என்றும், அதில் சிக்கிக்கொள்ளாமல் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் படத்தில் சொல்லியிருக்கிறோம். 

சாரா போதைக்கு அடிமையானவராக நடித்திருந்தாலும், போதை பழக்கத்திற்கு ஆளாகி, அதில் இருந்து ஒருவர் மீண்டு வர முடியும், என்பதுதான் அவரது கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பல காட்சிகள் ராவாக இருக்கும். குறிப்பாக பிரியாமணி குழுவினரின் கொலை,  சண்டைக்காட்சிகள் எல்லாமே ராவாக இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகளுக்காக சில ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். வெறும் வன்முறையும் தீய பழக்கங்களை பற்றி மட்டுமே சொல்லும் படமாக இல்லாமல் இந்தப் படம் நிச்சயமாக ஒரு விழிப்புணர்வுப் படமாக இருக்கும். 

இந்த படத்தை இளைஞர்களை விட பெற்றோர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.  காரணம், அவர்கள் இங்கு என்ன நடக்கிறது, என்ற உண்மையை தெரிந்துக்கொண்டால் தான் தங்களது பிள்ளைகளை பாதுக்காக்க முடியும், அதனால் இந்த படத்தை இளைஞர்கள் பார்க்கவில்லை என்றாலும் கூட பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.” என்றார்.

சாராவின் பருவத்தில் இருக்கும் பெண்தான் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரது தந்தை அர்ஜுனிடம் பேசிய போது அவர் மகள் இப்படி நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், படத்தின் தன்மைகளை அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்து இதனால் எந்த பாதிப்பும் வராது என்று புரிய வைத்தே, அவரை சம்மதிக்க வைத்தேன். சின்னப் பெண் சாராவும் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதவாறு நான் மிகவும் பொறுப்புடன் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைக்கிறேன்.

ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, விகாஸ் வாரியர் முதலானவர்களும் அவர்கள் ஏற்று இருக்கும் பாத்திரங்களும் கூட இதுவரை நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகத்தைப் பற்றியே இருக்கும்.

இந்தப் படத்துக்கு வித்தியாசமான இசை வேண்டி டிரம்ஸ் சிவமணியை ஒப்பந்தம் செய்தேன். அவரும் தன்னுடைய அதிகபட்சத திறமையை வைத்து இந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.

அதைப்போல் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும். இந்தப் படத்துக்கு புதிய நிறத்தை தந்திருக்கிறது.” என்றார்.

Tags: quotation gang, priya mani, sara vivek k kannan

Share via: