மாறுபட்ட கதாபாத்திரங்களில் சாக்ஷி அகர்வால்

15 Nov 2023

நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் ஐந்தாறு படங்களில்  ஹீரோயினாக நடித்து வருவதோடு,  கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப் பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார்.  கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி.

தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படமான 'சாரா'வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், '8 தோட்டாக்கள்' புகழ் வெற்றி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், 'கெஸ்ட் 2' உட்பட சில பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம். விரைவில் சாக்‌ஷி அகர்வாலை பாலிவுட் படங்களிலும் காணலாம்.

இந்த தீபாவளி, நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு மிகப் பெரும் கொண்டாட்டமாக,  பான் இந்திய தீபாவளியாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Tags: sakshi agarwal

Share via: