’கூலி’, ‘கங்குவா’, ‘புஷ்பா 2’ படங்களின் வசூல்: ஷங்கர் கணிப்பு
03 Jul 2024
‘கூலி’, ‘கங்குவா’ மற்றும் ‘புஷ்பா 2’ படங்கள் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை இயக்குநர் ஷங்கர் கணித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. ஜூலை 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் இறுதியில் ‘இந்தியன் 3’ ட்ரெய்லர் இணைக்கப்பட்டு, அதன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
இதனிடையே, ‘இந்தியன் 2’ படத்துக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வில், வசூல் நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார் ஷங்கர். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”’கல்கி 2898 ஏடி’ படம் பார்த்தேன். அந்தப் படம் இந்தியா சினிமாவின் பெருமை. 3 மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், கண்டிப்பாக ‘கல்கி 2898 ஏடி’ படம் 1000 கோடி வசூல் செய்யும் எனக் கூறினேன். இப்போது அந்த மைல்கல்லை நோக்கி வசூல் சென்றுக் கொண்டிருக்கிறது. அதே போல் ‘கூலி’, ‘கங்குவா’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகிய படங்கள் இந்த வசூல் மைல்கல்லைத் தொடும் என்று நம்புகிறேன். மேலும், ‘கல்கி 2898 ஏடி’ படத்தினைப் போலவே இந்தியா சினிமாவின் பெருமையாகவும் மாறும் என கருதுகிறேன்”
இவ்வாறு ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Tags: coolie, puspha 2, kanguva, shankar
