’கூலி’ படப்பிடிப்பு திட்டங்கள்
03 Jul 2024
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு திட்டங்கள் என்னவென்பது தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, ஃபகத் பாசில், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ’கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிட்டு வந்தார்கள். தற்போது அதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜூலை 5-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 10 நாட்கள் வரை தான் இந்தப் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதற்குப் பிறகு அடுத்த மாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சின்ன சின்ன காட்சிகள் மற்றும் ஒரு பாடலுக்கு முன்னதான காட்சிகள் மட்டுமே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து நடிகர்களும் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் அனைத்துமே செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இது தொடர்பான பேச்சுவார்த்தை, நடிகர்களின் தேதிகள், அரங்குகள் அமைக்கும் பணிகள் ஆகியவை ஹைதராபாத் படப்பிடிப்பு முடித்து படக்குழு திரும்பிய பின்பு தான் நடைபெறவுள்ளது.
110 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும் என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளது சன் பிக்சர்ஸ். ஆனால், கதைப்படி கண்டிப்பாக இதை தாண்டும் என்கிறார்கள்.
Tags: coolie, rajinikanth, lokesh kanagaraj
