மகேஷ் பாபுக்கு வில்லனாக பிரித்விராஜ் ஒப்பந்தம்
03 Jul 2024
ராஜமெளலி இயக்கவுள்ள படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரித்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு உலகளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் அவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் நாயகனாக மகேஷ் பாபு ஒப்பந்தமாகி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரான படங்களுள் அதிகப் பொருட்செலவில் இந்தப் படத்தினை உருவாக்கவுள்ளார் ராஜமெளலி.
ஆப்பிரிக்கா காடுகளில் நடைபெறும் ஒரு த்ரில்லர் கதையினை மகேஷ் பாபுவை வைத்து உருவாக்கவுள்ளார். இதில் வில்லனாக நடிக்க பிரித்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது. இந்தப் படத்தினை தொடங்கும் முன்பு, தற்போது மோகன்லால் நடிக்க இயக்கி வரும் ‘எம்புரான்’ படத்தினை முடிக்க பிரித்விராஜ் திட்டமிட்டுள்ளார்.
ராஜமெளலி படத்திற்காக மகேஷ் பாபு – பிரித்விராஜ் இருவருமே தங்களது உடலமைப்பை மாற்றியமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை மகேஷ் பாபு தொடங்கிவிட்டார். இதில் நாயகியாக நடிக்க இந்தோனிஷியா நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரபூர்வ அறிவித்து, இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயுத்தமாகி வருகிறது.
Tags: rajamouli, mahesh babu, prithivraj
