சல்மான்கானுக்கு வில்லனாக சத்யராஜ் ஒப்பந்தம்

28 May 2024

சல்மான்கனுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இதனை முழுமையாக முடித்துவிட்டு இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

சஜித் நாடியவாலா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக சல்மான்கான், நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளனர். சுமார் 400 கோடி பொருட்செலவில் பல்வேறு வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

‘சிக்கந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சல்மான்கானுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பல்வேறு மொழிகளில் சத்யராஜ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  தற்போது ‘சிக்கந்தர்’ படத்தின் மூலம் இந்தியில் வில்லனாக நடிக்கவுள்ளார் சத்யராஜ்.

Tags: salman khan, ar murugadoss, satyaraj

Share via: