இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பரியேறும் பெருமாள்’

28 May 2024

தமிழில் வரவேற்பினை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம், இந்தியில் ரீமேக் ஆகிறது.

மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

தற்போது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகியுள்ளது. ஜீ ஸ்டூடியோஸ், தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் க்ளவுட் 9 பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ‘தடக் 2’ எனப் பெயரிட்டுள்ளார்கள். மராத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்ற ‘சாய்ரட்’ படத்தின் இந்தி ரீமேக் தான் ‘தடக்’ என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தாந்த் சத்ருவேதி மற்றும் ட்ரிப்டி டிம்ரி இணைந்து நடித்து வரும் ‘தடக் 2’ திரைப்படம் நவம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாசியா இக்பால் இதனை இயக்கி வருகிறார்.

Tags: Pariyerum Perumal, hindi remake

Share via: