‘இந்தியன் 2’ படத்தின் கதைக்களம்

28 May 2024

’இந்தியன் 2’ படத்தின் கதைக்களம் என்னவென்பது தெரியவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜுன் 1-ம் தேதி சென்னையில் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

’இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாகவே இதன் கதையினை அமைத்திருப்பதாக ஷங்கர் அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். தற்போது ‘இந்தியன் 2’ கதை என்ன என்பது வெளியாகியுள்ளது.

’இந்தியன் 2’ படத்தில் பல்வேறு ஊழல்களை கண்டறிந்து அதனை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிடுபவராக சித்தார்த் நடித்துள்ளார். அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதனை சரி செய்பவராக சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமல் என கதைகளம் அமைத்திருக்கிறார் ஷங்கர்.

சேனாதிபதியின் தந்தை வீரசர்கார் சேனாதிபதி கதாபாத்திரத்திலும் கமலே நடித்திருக்கிறார். சேனாதிபதியின் முன்கதையினை ‘இந்தியன் 3’ படத்தில் கூறியிருக்கிறார் ஷங்கர். ஜூலையில் ‘இந்தியன் 2’ படத்தினையும், 2025-ம் ஆண்டு ஜனவரியில் ‘இந்தியன் 3’ படத்தினையும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Tags: indian 2, kamal haasan, shankar

Share via:

Movies Released On July 27