ரஜினிக்கு நண்பராக சத்யராஜ்

28 May 2024

‘கூலி’ படத்தில் ரஜினிக்கு நண்பனாக சத்யராஜ் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளது. இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சத்யராஜ். ‘சிவாஜி’ படத்திலேயே இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜ் ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

‘கூலி’ படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சத்யராஜ். இருவருடைய காட்சிகள் தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். ‘கூலி’ படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

முதலில் ‘கூலி’ படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

Tags: rajinikanth, sathyraj,coolie

Share via: