‘கார்கி’ இயக்குநர் இயக்கத்தில் யோகி பாபு

28 May 2024

கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார் யோகி பாபு.

‘ரிச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் ராமசந்திரன். அந்தப் படம் போதிய வரவேற்பினை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து சாய்பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தினை இயக்கினார். 2டி நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது.

’கார்கி’ படத்துக்குப் பிறகு கெளதம் ராமசந்திரனின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. இது தொடர்பாக விசாரித்த போது, கெளதம் ராமசந்திரன் சத்தமின்றி படமொன்றை இயக்கி முடித்துள்ளார். அதில் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார்.

இதனை முன்னணி இசை நிறுவனமொன்று தயாரித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தற்போது முழுமையாக படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Tags: gargi, yogi babu

Share via: