யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் P.O|

11 Aug 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P.O)' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை,  இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

'Tootu Madike' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கன்னடத் திரையுலகத்தின் தயாரிப்பு நிறுவனமான சர்வதா சினி காரேஜ் மற்றும் “வீரப்பன், சூர்யவம்சி, வான்கு’ படங்களைத் தயாரித்த, ‘நல்ல சமயம்’ படத்தை வினியோகித்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளத்தை கொண்ட இந்த படத்தில், 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பன்முகத் தமிழ் நடிகரான யோகி பாபு, கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூணார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண் மற்றும் மது ராவ் உள்ளிட்ட பலரும் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், பம்பை மற்றும் எருமேலி போன்ற புகழ்பெற்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

வலுவான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த படத்தின் கதை பேசுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையுடனும், ஆழமான உணர்வுபூர்வமான தொடர்புகளுடனும், இந்த படம் ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு அய்யப்பன் எழுதியுள்ளார். அருண் ராஜ் இசையமைக்க, வினோத் பாரதி ஒளிப்பதிவையும், பிகே படத்தொகுப்பையும் கையாளுகின்றனர். தொழில்நுட்பக் குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டை பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'சன்னிதானம் (P.O)' விரைவில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'சன்னிதானம் (P.O)' விரைவில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Tags: sannithanam po, yogi babu

Share via: