‘திரௌபதி’ படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கி முடித்துள்ள படம் ‘ருத்ர தாண்டவம்’.

ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா நாயகன், நாயகியாக நடிக்க, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு தணிக்கை நடைபெற்று ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில ’கட்’களையும் கொடுத்துள்ளனர்.

‘திரௌபதி’ படத்தை வெளியிட்ட 7 ஜி பிலிம்ஸ் சிவா இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

விரைவில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.