ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மாசாணி அம்மன்’
20 Jun 2024
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடிக்கவுள்ள படத்துக்கு ‘மாசாணி அம்மன்’ எனப் பெயரிட்டுள்ளார்.
விஜய் படத்தினை இயக்கும் வாய்ப்பு கை நழுவியதால், தான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே பாணியில் வேறொரு கதையினை தயார் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
அந்தக் கதையில் தானே நடித்து, இயக்கவும் முடிவு செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்தினை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தினை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை. ஆகையால் ‘மூக்குத்தி அம்மன்’ பெயரை உபயோகப்படுத்த முடியாது.
இதனால், தான் தயார் செய்துள்ள கதைக்கு ‘மாசாணி அம்மன்’ எனப் பெயரிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அம்மனாக த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Tags: rj balaji, maasani amman