தனுஷை இயக்கும் ‘போர் தொழில்’ இயக்குநர்

20 Jun 2024

தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ’போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா.

சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. மேலும், பல மொழிகளில் ரீமேக்கும் ஆகவுள்ளது.

மீண்டும் அசோக் செல்வன் – விக்னேஷ் ராஜா இருவரும் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அது திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு வெவ்வேறு நடிகர்களை அணுக ஆரம்பித்தார் விக்னேஷ் ராஜா.

இறுதியாக இவருடைய கதையைக் கேட்டுவிட்டு, உடனடியாக நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். தனது நிறுவனத்தின் மூலமாகவே விக்னேஷ் ராஜா படத்தினை தனுஷே நடித்து தயாரிப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது நடித்து, இயக்கி வரும் படங்களின் பணிகளை முடித்துவிட்டு, விக்னேஷ் ராஜா படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.

Tags: dhanush, por thozhil

Share via: