பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி

20 Jun 2024

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார்.

‘விலங்கு’ வெப் தொடரின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக பல தயாரிப்பாளர்கள் அவருக்கு முன் தொகை கொடுத்துள்ளார்கள். ஆனால், அடுத்த படம் யாருடன் என்பதை முடிவு செய்யாமல் இருந்தார்கள்.

தற்போது சூர்யாவை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டது. இதனிடையே, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கான கதை விவாதம் முடிவடைந்து, திரைக்கதை உருவாக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் பிரசாந்த் பாண்டிராஜ்.

’லிங்கம்’ என்ற வெப்தொடர் பிரசாந்த் பாண்டிராஜ் மேற்பார்வையில் உருவாகி வருகிறது. அதன் பணிகளை முடித்துவிட்டு, சூரி படத்தினை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். 

Tags: prashanth pandiraj, soori

Share via: