ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் இணையும் ‘சிங்கநடை’?
20 Jun 2024
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘சிங்கநடை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். மேலும், விக்ராந்த், ஷபீர், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் 70% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
தற்போது சல்மான் கான் நடித்து வரும் இந்திப் படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்ட படப்பிடிப்பினை முடித்திவிட்டு, மீதமுள்ள சிவகார்த்திகேயன் படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘சிங்கநடை’ என பெயரிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த தலைப்பு குறித்து விசாரித்த போது, ‘சிங்கநடை’ தலைப்பும் பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டார்கள்.
‘அமரன்’ வெளியான பின்பு தான், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் எனக் கூறப்படுகிறது.
Tags: sivakarthikeyan, ar murugadoss