இன்று இரவு 8 மணிக்கு ரஜினிகாந்தின் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி
23 Mar 2020
உலக அளவில் புகழ் பெற்ற ஒரு டிவி நிகழ்ச்சி, டிஸ்கரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘இன் டு த வைல்ட், வித் பியர் கிரில்ஸ்’.
இந்நிகழ்ச்சியில் உலகப் பிரபலங்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். இதற்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்றுள்ளார்.
பிரபலங்களை ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்று, அங்கு அவர்களை சில சாகசச் செயல்களை செய்ய வைத்து பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி இது.
பிரதமர் மோடிக்கு அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள பண்டிப்பூர் காட்டில் நடந்தது.
அதன் ஒளிபரப்பு இன்று இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியைப் பற்றி ரஜினிகாந்த் இன்று டிவிட்டரில், “எனது வாழ்க்கையில் ஒரு அற்புதமான சாகச அனுபவம் இது. நான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எவ்வளவு ரசித்தேனோ அது போல நீங்களும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
Tags: rajinikanth, discovery channel, Into The Wild With Bear Grylls