’புஷ்பா 2’ நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: அல்லு அர்ஜுன் Vs சுகுமார்

17 Jul 2024

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமாருக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. முதல் பாகத்தின் வெற்றியால் 2-ம் பாகத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இன்னும் இதன் படப்பிடிப்பு முடியவடையவில்லை.

அக்டோபர் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி, இப்போது டிசம்பர் வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு. இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, நடிகர்கள் தேதிகள் திட்டமிடப்பட்டு வந்தது. இப்போது இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்கும் இடையே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோதலின் முடிவாக அல்லு அர்ஜுன் தனது நீண்ட வருட ‘புஷ்பா’ தாடியை முழுமையாக நீக்கிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். மேலும், சுகுமாரும் வெளிநாடு சென்றுவிட்டார். இருவருக்குமான மோதலால் இப்போது தயாரிப்பு நிறுவனம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறது.

சமூக வலைதளத்தில் விமானத்தில் அல்லு அர்ஜுன் இருப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் மோதல் உண்மை தான் என தெலுங்கு திரையுலக முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படத்துக்கே இந்த நிலையா என்ற கேள்வி தான் எழுகிறது.

Tags: pushpa 2, allu arjun

Share via:

Movies Released On February 05