தமிழ்ப்பட வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பிரியாலால்
10 Dec 2020
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜீனியஸ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பிரியா லார்.
அப்படம் வெளியான பின் படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு திரும்பியவர் அடுத்து ‘குவா கோரிங்க’ படத்தில் அறிமுகமாகிறார். இப்படம் டிசம்பர் 17ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனரான மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது.
கல்லூரி காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன் சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா லால். சமீபத்தில் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது .
கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானதால் படம் முடிந்தும் ஒரு வருடமாக தன்னம்பிக்கையோடு 'குவா கோரிங்கா'வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரியாலால் .
'ஜீனியஸ்' படத்திற்குப் பிறகு தனக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்த போது படிப்பை முடிக்க வெளிநாட்டில் இருந்ததாலும் , தெலுங்குப் படம் நடித்து முடிக்க வேண்டி இருந்ததாலும் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்த முடியாமல் போனதில் வருத்தம் என்கிறார் பிரியா. இனி எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டேன்.. தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசையும் லட்சியமும் என்கிறார். இதற்காக தமிழை நன்றாகப் படிக்கவும் பேசவும் கற்றுக் கொண்டுள்ளாராம்.
பிரியாலால் துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து, லண்டனில் படித்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே நடனம் கற்று வந்துள்ளார் . சிறுவயதிலேயே சினிமா நடிகை ஆக வேண்டும் என்று மனதில் ஆசை வளர்த்த பிரியாலால் ஒரு முறை விடுமுறை காலத்தில் இந்தியா வந்த போது , தனது ன்பனிரெண்டாம் வயதில் மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த ' ஜனகன் ' படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்து தனது சினிமா பிரவேசத்தை துவக்கினார்.
அவ்வப்போது விடுமுறை காலங்களில் மட்டும் இந்தியா வந்து படங்களில் நடித்து வந்த இவர் பட்டப்படிப்பு முடித்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவதற்கென்றே கேரளாவில் குடிபெயர்ந்துள்ளார்.
Tags: priya lal, genius
