‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு ஆரம்பம்
10 Dec 2020
விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’, விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’, கதிர், சூரி நடிக்கும் ‘சர்பத்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்க உள்ள படம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருபவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித்குமார்.
விஜய் சேதுபதி நடித்த ‘96’ படத்தை வெளியிட்டதும் இந்நிறுவனம்தான். இவர்களின் அடுத்து தயாரிப்பு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கப் போகும் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. அதில் தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’ பெரிய வெற்றிப்படமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கூட்டணி மீண்டும் இணைகிறது, புதிதாக சமந்தா இணைந்துள்ளார்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று அடுத்த ஆண்டு மத்தியில் வெளிவர உள்ளது.
Tags: kathuvakkula rendu kadhal, vignesh sivan, anirudh, vijay sethupathi, nayanthara, samantha
