பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி

07 Aug 2024

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார் சூரி.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் தயாரித்த இந்தப் படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டார். வசூல் ரீதியாக இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் இதன் 50 நாள் விழா கொண்டாடப்பட்டது.

’கருடன்’ படத்துக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் சூரிக்கு கதைகள் கூறிவந்தார்கள். ஆனால், சூரியோ தனது அடுத்த படம் குறித்து அமைதி காத்து வந்தார். இதனிடையே, மீண்டும் ‘கருடன்’ தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கே தேதிகள் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தினை ‘விலங்கு’ தொடர் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 7) வெளியாகும் என தெரிகிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பையும் தொடர்ச்சியாக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

Tags: soori

Share via:

Movies Released On September 14