6 ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்ற தசரா

06 Aug 2024

நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான "தசரா" திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

வெண்ணிலா கதாபாத்திரத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் தசராவுக்குப் பின்னால் உள்ள படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமையைக் கொண்டாடியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் புதுமையான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகக் கௌரவிக்கப்பட்டார். ஃபிலிம்ஃபேர் விருதை வென்ற முதல் அறிமுக இயக்குநர் என்ற சாதனையைப் படைத்த அவர், தனது முதல் படத்திலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் கடந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத்தின் அற்புதமான காட்சிகளைப் படம்பிடித்த அவரது சிறப்பான பணிக்காக, அங்கீகரிக்கப்பட்டார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா படத்தின் செட் மற்றும் காட்சி சூழல்களை வடிவமைப்பதில் தனது உன்னிப்பான பணிக்காக விருதைப் பெற்றார்.

நடன இயக்குநர் மாஸ்டர் பிரேம் ரக்ஷித் துள்ளலான மற்றும் ஈர்க்கக்கூடிய தூம் தாம் பாடலை வடிவமைத்ததிற்காகக் கௌரவிக்கப்பட்டார்.

விருதை பெற்றுக் கொண்ட பிறகு நடிகர் நானி கூறியதாவது.. , “எனக்குப் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்திலிருந்தது, ஆனால் காலப்போக்கில் அந்த ஆசை குறைந்துவிட்டது. விருதுகளுக்காக எனக்கே அதிக ஆசை இல்லை. மாறாக, என்னுடைய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், என் படங்களில் அறிமுகமான புதிய திறமையாளர்கள், மற்ற கலைஞர்கள் விருதுகளைப் பெற வேண்டும் என்பதே எனது இப்போதைய ஆசை. இப்போது அது நடந்திருப்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

இன்று, ஸ்ரீகாந்த் மற்றும் ஷௌரியவ் விருதுகளை வெல்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பது பாக்கியம். இயக்குநர்கள் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஷௌரியவ் ஆகியோரின் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில், விருது அட்டைகளைப் போட்டோ பிரேம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்த விருது அவர்கள் விரும்பும் இடத்தை அடைய அவர்களின் பயணத்தின் ஒரு சிறிய பகுதியாக இருக்கும். அவர்களின் முதல் அடிக்கு நான் மிகச் சிறிய அளவிலாவது பங்களித்திருந்தால் அதுவே எனக்குப் போதுமானது. 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தசரா மற்றும் ஹாய் நானா ஆகிய சிறந்த திரைப்படங்கள் மகிழ்ச்சியைத் தந்துள்ளது."

இரண்டு பெரிய பிளாக்பஸ்டர்களைப் பெற்ற நானிக்கு, 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. நடிகர் நானியின் அடுத்த திரைப்படமான "சூர்யா'ஸ் சாட்டர்டே" வரும் ஆகஸ்ட் 29 அன்று திரைக்கு வரவுள்ளது.

சமசரமற்ற வகையில் பெரும் பட்ஜெட்டில் தசரா படத்தை உருவாக்கிய, SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி, நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் பிளாக்பஸ்டர் கலவையில் மீண்டும் ஒரு அற்புத படைப்பைத் தரவுள்ளார்.

Tags: nani, dasara, filmfare

Share via:

Movies Released On January 15