’ஆவேஷம்’ தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா?
07 Aug 2024
‘ஆவேஷம்’ மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார்.
ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான படம் ‘ஆவேஷம்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு பெற்றது. பலரும் இதில் ஃபகத் பாசிலில் நடிப்பு அற்புதமாக இருந்ததாக கொண்டாடினார்கள். ஓடிடியில் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
தற்போது, ‘ஆவேஷம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தயாராகிறது. இதில் ஃபகத் பாசில் கதாபாத்திரத்தில் நடிக்க பாலகிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இது தொடர்பாக பாலகிருஷ்ணா தரப்போ, “பாலகிருஷ்ணா பல்வேறு படங்களில் நடிக்கவிருப்பது உண்மைதான். ஆவேஷம் தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆகையால், இது வெறும் வதந்தி தான்” என்று தெரிவித்துள்ளார்கள்.
Tags: balakrishna , avesham