’கோட்’ படத்தின் கதை
07 Aug 2024
‘கோட்’ படத்தின் கதை என்னவென்று வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இரண்டு மாறுபட்ட வேடங்களில் விஜய் நடித்திருப்பதை படக்குழுவினர் உறுதி செய்திருக்கிறார்கள். இதனிடையே, படத்தின் கதை என்னவென்று வெளியாகியுள்ளது. 2004-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற மெட்ரோ குண்டு வெடிப்பை மையப்படுத்தி ‘கோட்’ கதையினை உருவாக்கி இருக்கிறார் வெங்கட்பிரபு.
மாஸ்கோவில் மெட்ரோ குண்டுவெடிப்பில் பலரும் கொல்லப்பட்டார்கள். அதற்கு காரணமானவர்கள் யார், பின்விளைவுகள் என்ன என்பதை திரைக்கதையாக உருவாக்கி உள்ளார் வெங்கட்பிரபு. வெளிநாட்டில் உள்ள டிக்கெட் புக்கிங் இணையதளம் மூலம் இந்தக் கதை வெளியாகியுள்ளது.
இந்தக் கதை உண்மை தானா அல்லது வேறு எதுவும் கதையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Tags: goat, vijay