பேட்டைக்காளி காளையை கோவிலுக்கு தானமாக வழங்கிய இயக்குனர்!

15 Mar 2023

சமீபத்தில் ஆஹா ஓடிடியில் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்ற வலைத்தொடர் பேட்டைக்காளி. இயக்குனர் ல.ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினர், உண்மையான ஜல்லிக்கட்டுகளில் இறங்கி படப்பிடிப்பு நடத்தியிருந்த இந்த வலைத் தொடரில், கிஷோர், வேலராம மூர்த்தி, கலையரசன், ஆண்டனி, ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கின்றனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், சுதர்ஷன் படத்தொகுப்பில் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி தயாரித்திருந்தது.. வெற்றி மாறன் show runner ஆக பொறுப்பேற்றிருந்தார்.

இந்த தொடர் வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் படப்பிடிப்பு நடந்த பகுதிகளுக்கு சென்று படப்பிடிப்புக்கு உதவியாக இருந்த ஊர்மக்களுக்கு, மாடு மேய்ப்பவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பேட்டைக்காளியாக படத்தில் நடித்த காளி என்ற காளையை இயக்குனர் வளர்த்து வந்தார். இந்த காளையை, சிங்கம்புணரி சேவக மூர்த்தியார் கோவிலுக்கு தானமாக அளித்து விட்டார். பேட்டைக்காளியின் நாயகனாக நடித்த காளை, சிவகங்கையில் கோவில் மாடாக வலம் வருகிறது.

கடந்த வருடத்தில் வெளிவந்த வெப் சீரிஸ்களில் அதிக பட்ச மக்களால் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் பேட்டைக்காளி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: கிஷோர், வேலராம மூர்த்தி, கலையரசன், ஆண்டனி, ஷீலா ராஜ்குமார்

Share via: