மீண்டும் இணைந்த சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி
25 Jul 2024
மனக்கசப்புகள் மறைந்து மீண்டும் சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி இணைந்து பணிபுரிந்து வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படங்களில், காமெடி காட்சிகளில் வடிவேலு நடித்தவை இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகின்றன. ‘வின்னர்’, ‘கிரி’, ‘தலைநகரம்’ என பல படங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் தனது படங்களில் வடிவேலுவை தவிர்த்து வந்தார் சுந்தர்.சி.
’அரண்மனை 4’ பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பலரும் சுந்தர்.சி இயக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தார்கள். இது குறித்த பேச்சுவார்த்தையில் எதுவுமே அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இதனால், மீண்டும் தனது பாணிக்கே திரும்பியிருக்கிறார் சுந்தர்.சி
அவர் நாயகனாக நடிக்க மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் தொடங்கியிருக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை வருட இறுதியில் வெளியிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளார் சுந்தர்.சி
இதில் சுந்தர்.சிக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.