உருவாகிறது ‘பார்க்கிங் 2’

30 Mar 2024

‘பார்க்கிங்’ வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகம் உருவாகிறது.

2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. சினிஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி  இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றியால், ‘பார்க்கிங்’ 2-ம் பாகம் உருவாக இருக்கிறது. தற்போது அதற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருகின்றன. ராம்குமார் பாலகிருஷ்ணனே இயக்குவார் எனத் தெரிகிறது.

‘பார்க்கிங் 2’ படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதலில் கதை பணிகளை முடித்தவுடன், நடிகர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது. 

Tags: parking 2

Share via: