ரஜினி படத்தின் கதைகளம்: லோகேஷ் கனகராஜ் தகவல்

30 Mar 2024

ரஜினி படத்தின் கதைகளம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமூக வலைதளத்தில் இருந்து விலகினார் லோகேஷ் கனகராஜ். மீண்டும் தனது அடுத்த பட அறிவிப்பின் போது திரும்புவேன் என்று கூறியிருந்தார். அதன்படி மார்ச் 28- ம் தேதி திடீரென்று சமூக வலைதளத்திற்கு திரும்பினார்.

அன்றைய தினம் யாருமே எதிர்பாராத வண்ணம், மாலை 6 மணிக்கு ‘ரஜினி 171’ படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு டீஸர் ஆகியவை ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்தது. அதில் ரஜினி வித்தியாசமான லுக்கில் கையில் வாட்ச்கள் அனைத்தும் இணைந்து விலங்காக அமைந்திருந்தது. 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது ‘ரஜினி 171’ படம் மற்றும் போஸ்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

“இந்தப் படத்தில் வரும் ரஜினி மாதிரி இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம். அந்த வகையில் பணிபுரிந்து வருகிறோம். இது 100% லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும். படத்தின் போஸ்டரை வைத்து பலரும் வெவ்வேறு கதைகள் எழுதி வருகிறார்கள். ஆனால், நாங்கள் வேறொன்று எழுதி வைத்திருக்கிறோம்.”

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தினை முடித்தவுடன், ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Tags: rajinikanth, lokesh kanagaraj, thalaivar 171

Share via: