சீன மொழியில் ரீமேக் ஆகிறது ‘பார்க்கிங்’

21 May 2024

தமிழில் வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் சீன மொழியில் ரீமேக் ஆகவுள்ளது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பார்க்கிங்’. கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனால் இதன் 2-ம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.

இதனிடையே, ‘பார்க்கிங்’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் இதர மொழிகளிலும் இந்தப் படத்தினை ரீமேக் செய்யவுள்ளார்கள். இதன் இந்தி ரீமேக் உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியுள்ளார்கள். மேலும், ‘பார்க்கிங்’ படத்தினை சீன மொழியில் ரீமேக் செய்யவுள்ளார்கள்.

‘பார்க்கிங்’ படத்தின் சீன மொழி ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கும் நிறுவனத்தின் பெயரை ரகசியமாக வைத்துள்ளார்கள். விரைவில் சீன மொழியில் ‘பார்க்கிங்’ ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Tags: parking, harish kalyan, remake rights

Share via: