உருவாகிறது எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்
22 May 2024
கர்நாடக இசை உலகின் ஜாம்பவானான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.
கர்நாடக சங்கீதத்தின் இசையுலகில் மிகப்பெரிய ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவர் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இசையுலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசையுலக ஜாம்பவான் எம்.எஸ்.சுப்புலட்சுமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என இவருடைய விருதுகள் பட்டியல் என்பது ஏராளம். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இந்தப் படம் பேச்சுவார்த்தையில் இருந்தாலும், தற்போது இதன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதனை ராக்லைன் வெங்கடேஷ் பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் உள்ளிட்ட விபரங்களை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க த்ரிஷா, ராஷ்மிகா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என்பதால், யாருடைய தேதிகள் ஒத்துவருமோ அவர்களை வைத்து ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது படக்குழு.
Tags: m s subhulakshmi, biopic