பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி: பின்னணியில் நடந்தது என்ன?
24 Jun 2024
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக கதைகள் மட்டுமே எழுதி வந்தார் பாண்டிராஜ். பல்வேறு நாயகர்களை அணுகி கதைகள் கூறினாலும், தேதிகள் இல்லாத காரணத்தினால் படம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இறுதியாக ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி இருவரிடமும் கதைகள் கூறியிருந்தார்.
இதில் விஜய் சேதுபதி படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பல தயாரிப்பாளர்கள் பட்ஜெட் அதிகமாக இருக்கிறது என ஒதுங்கிக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் தான் ‘மகாராஜா’ படம் வெளியாகி வசூலைக் குவித்து கொண்டிருக்கிறது. மொத்த வசூலில் சுமார் 60 கோடியைத் தாண்டி இருக்கிறது.
‘மகாராஜா’ வெற்றியினை முன்வைத்து, மீண்டும் பாண்டிராஜ் – விஜய் சேதுபதி படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கியது. இறுதியாக சத்யஜோதி நிறுவனம் இதனை தயாரிப்பதாக ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதை முடித்தவுடன் பாண்டிராஜ் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
Tags: pandiraj, vijay sethupathi