’கல்கி 2898 ஏடி’ டிக்கெட் புக்கிங்கில் குளறுபடி

24 Jun 2024

‘கல்கி 2898 ஏடி’ டிக்கெட் புக்கிங்கில் குளறுபடி ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் சரி செய்யப்பட்டது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜுன் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பட வெளியீட்டுக்கு முந்தைய வியாபாரமே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இதனிடையே, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 70 ஆயிரம் டிக்கெட்கள் BOOK MY SHOW தளத்தில் புக் செய்யப்பட்டுள்ளது. இதில் தான் குழப்பம் ஏற்பட்டது.

என்னவென்றால், ராஜசேகர் நடித்த ‘கல்கி’ படத்தின் பெயரும் டிக்கெட் புக் செய்யும் போது காட்டியிருக்கிறது. இதற்கு பலரும் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டார்கள். இது BOOK MY SHOW தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகும்.

இதை உடனடியாக சரி செய்து, ‘கல்கி’ படத்துக்கு டிக்கெட் புக் செய்தவர்களுக்கு, ‘கல்கி 2898 ஏடி’ படத்துக்கு மாற்றி தரப்படும் என்று BOOK MY SHOW நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. தற்போதுள்ள சூழலில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் முதல் நாள் வசூலை ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் வசூல் முறியடிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

Tags: kalki, prabhas, kamal haasan

Share via:

Movies Released On July 15