கொரானோ தொற்றின் தீவிர பரவல் காரணமாக இன்று முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.

கடந்த வருட கொரானோ தொற்று பரவலின் போது தியேட்டர்கள் மூடப்பட்டதால் புதிய படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள்.

தற்போது அதே போன்றதொரு நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகத் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார், மாமனிதன்’, நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’, த்ரிஷா நடித்துள்ள ‘ராங்கி’, உள்ளிட்ட சில படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முன்னணி நிறுவனங்கள் பேசி வருகிறதாம்.

இன்று மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவலில்லை. அடுத்த வாரம் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைப் பொறுத்தே அமையும்.